காசாவில் சிறைப்பிடிக்கப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஐநா.பொதுசபைக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
காசா போர் பற்றிப் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஏறத்தாழ 5 மாதங்களாக நீடிக்கும் நிலையில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடும் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றும் அதே நேரத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இருநாட்டு கொள்கையுடன் இந்தியா உறுதியாக இருப்பதாக ருச்சிரா தெரிவித்தார்