​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு முன்னுரிமை தர கோரி மக்கள் போராட்டம்... தங்கசாலை பகுதியில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Published : Mar 05, 2024 6:59 AM

புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு முன்னுரிமை தர கோரி மக்கள் போராட்டம்... தங்கசாலை பகுதியில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Mar 05, 2024 6:59 AM

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை வேறு பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்டோர் பணம்செலுத்தி குடியிருப்புகளை பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து,

ராமதாஸ் நகர் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.