140 கோடி இந்தியர்கள்தான் தனது குடும்பம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானாவின் அடிலாபாத் கூட்டத்தில் பேசிய அவர், தீவிர ஊழல், சமாதான அரசியலில் வீழ்ந்து கிடக்கும் இண்டியா கூட்டணியினர் பதற்றத்தில் இருப்பதாகவும் குடும்ப அரசியல் பற்றி பேசியதும் தனக்கு குடும்பம் இல்லை என்று கூறுவதாகவும் கூறினார்.
தனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றும் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் தனது குடும்பத்தினர் என்றும் பிரதமர் பேசினார்.
பீகாரில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், குடும்ப அரசியல் என்று மோடி குற்றம்சாட்டுவதாகவும், குடும்பம் இருப்பதால் தாங்கள் குடும்ப அரசியல் செய்வதாகவும் மோடிக்கு குடும்பம் இல்லாதது பற்றி அவர்தான் விளக்க வேண்டும் என்றும் பேசிய நிலையில், பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.