மத்திய அமெரிக்க நாடான ஹைட்டியில், ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் தப்பி சென்ற நிலையில், வன்முறை சம்பவங்கள் நேரமல் தடுக்க 4 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் ஜோவினல் மோயிஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலம்பிய ராணுவ வீரர்கள் உட்பட மூன்றாயிரத்து 500 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை மீது சனிக்கிழமை இரவு கடத்தல் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சுமார் 100 கைதிகளைத் தவிர மற்ற அனைவரும் தப்பி சென்றதாக கூறப்படும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.