தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயலுவதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
கடலூரில் பேட்டியளித்த அவர், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த யாரோ ஒரு நபருக்காக ஒட்டுமொத்த தி.மு.க.வையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.