​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் ரூட் மேப்பிங் மூலம் சந்தேக நபரின் பாதை குறித்து ஆராயும் போலீஸ்

Published : Mar 04, 2024 2:47 PM

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் ரூட் மேப்பிங் மூலம் சந்தேக நபரின் பாதை குறித்து ஆராயும் போலீஸ்

Mar 04, 2024 2:47 PM

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் பேருந்தில் இருந்து கீழே இறங்கிச் சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்து ரூட் மேப்பிங் மூலம், அவர் எந்த வழியாக ஓட்டலை அடைந்தார், எந்த வழியில் திரும்பினார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.

புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான அந்த உணவு விடுதியில் குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் உணவகத்திற்கு வந்து சென்றதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து சுற்றுவட்டாரத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்திருந்த ஒரு நபர் உணவகத்திற்கு அருகில் பேருந்தில் வந்து இறங்கியது தெரிய வந்தது.