பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறை இன்று பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீப்.
சீர்குலைந்த பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீரமைக்க உறுதிமொழி ஏற்ற அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.
சமநிலை கொள்கையுடன் அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
72 வயதான ஷாபாஸ் ஷெரீப், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்க அவருடைய சகோதரர் நவாஸ் ஷெரீப்பால் பரிந்துரைக்கப்பட்டார்.