தனுஷ்கோடியில் கூட்டம் கூட்டமாக வலசை வரும் பிளமிங்கோ பறவைகள்
Published : Mar 04, 2024 7:28 AM
வலசை வரும் பிளமிங்கோ பறவைகளைக் காண தனுஷ்கோயில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பறவைகளோடு புகைப்படம் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கூட்டம் கூட்டமாக பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன.
கடல் நீர் மாசுபாடு மற்றும் கடல் நீரில் தரம் குறைந்தன் காரணமாக தாமதமாக பிளமிங்கோ பறவைகள் கோதண்டராமர் கோவில் அருகே உள்ள காப்புக்காடு பகுதிக்கு வலசை வரத் தொடங்கின.
தற்போது 4,000க்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன.