மாமல்லபுரத்தில் சிற்பக் கலையை பயில வந்த பிரான்ஸ் நாட்டு பெண் கேப்ரியல் தனக்கு சிற்பம் பயிற்றுவித்த சீனிவாசனை கடந்த 2004-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு சீனிவாசனையும் தன்னுடன் பிரான்ஸ் அழைத்து சென்றார் கேப்ரியல்.. பிறகு அவருடன் கேப்ரியேலும் முழு நேரம் சிற்பம் வடிவமைக்கும் பணியில், மெல்ல, மெல்ல ஒரு கை தேர்ந்த முழு நேர சிற்பக்கலைஞராக மாறியுள்ளார்.
வருடத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரான்சிலிருந்து மாமல்லபுரம் வரும் சீனிவாசன்-கேப்ரியேல் தம்பதியினர் இங்கும் சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.