பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் குழுக் கூட்டம் மாரத்தான் போல சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்றது.
2047 பாரதத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட திட்டங்கள் குறித்தும் தற்போது வரை செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய முக்கியப்பணிகள் குறித்தும் அவர் திட்டமிட்டார்.
மே மாதம் புதிய அரசு அமைத்ததும் 100 நாள் இலக்குடன் வேகமாக தொடங்க வேண்டிய பணிகள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.