ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் அருகே இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
எதிரி இலக்குகளை குறிதவறாமல் சுடுவது மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள இந்திய-ஜப்பானிய ராணுவ கூட்டுப் பயிற்சி மார்ச் - 9-ம் தேதி நிறைவடைகிறது.