சென்னையில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சாலை, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
காந்தி மண்டபம் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.