திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் நான்கு கடைகளில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.