சென்னையில் கிரானைட் குவாரி அதிபர்கள், கட்டுமான நிறுவனம் மற்றும் ரசாயன நிறுவனம் தொடர்புடைய சுமார் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
தியாகராயர் நகரில் உள்ள அயிரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவன அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் ஆரம் டிரேடிங் உள்ளிட்டவை தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை ஏற்றுமதி - இறக்குமதி செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.