கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் கோயில் விழாவில் படைக்கப்பட்ட மதுவை பங்கிட்டு குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த செல்வக்குமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததால் மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து மதுவை பரிசோதனைக்காக போலீஸார் எடுத்துச் சென்றனர்...