சென்னையில் பேருந்து எங்கே வந்துக் கொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிந்துக் கொள்ளும் சிட்டி பஸ் சிஸ்டம் 2025 ஜூலையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக 50 பேருந்துகளில் நிறுவப்பட்டு வருவதாகவும் கைபேசி செயலி வாயிலாக தகவல்களை அறியும் வகையில் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார்.
குறிப்பிட்ட பேருந்து எப்போது புறப்படும், எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான பயணிகள் தகவல் அமைப்பு 500 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 71 முனையங்களில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார்.