தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோனுகாலில் உள்ள செந்தில்குமார், கண்ணன் ஆகியோருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்ததையடுத்து, இரவுப் பணியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.