தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சந்திரசேகர் என்பவரது காரில் வைத்திருந்த 17 லட்ச ரூபாய் கடந்த மாதம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.