இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தால் வெற்றி பெற்று விடலாம் என பிரதமர் நினைப்பதாகவும், அவர் 40 நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெற முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும், தமிழக மக்கள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார்.