பாகிஸ்தானில் குர்ஆன் வசனங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்த பெண்ணை, எதிர்ப்பு கும்பலிடம் இருந்து துணிச்சலுடன் மீட்ட பெண் போலீசுக்கு அந்நாட்டு அரசு விருது அறிவித்துள்ளது.
லாகூரில் கணவருடன் சென்ற அந்தப் பெண் அரபு எழுத்து பொறித்திருந்த ஆடை அணிந்திருந்ததால் சிலர் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளரன சையதா ஷெர்பானோ நக்வி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தார்.
அவரது பெயர், பாகிஸ்தான் சட்ட அமலாக்கத்திற்கான உயரிய வீர விருதான குவாய்ட்-இ-ஆஸாம்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது..