4 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண பயணிகள் ரயில்களின் சேவை கட்டணம் குறைக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த கட்டணத்தை வசூலிக்கும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது ஊரடங்கு அமலில் இருந்ததால், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு பயணிக்கு 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுவந்தது.
பெருந்தொற்று முடிவுக்கு வந்ததை அடுத்து பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பயணிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இன்று முதல் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
ரயில் நிலையங்களின் தொலைவுக்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன