2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை அறிவித்த பின் பேசிய பிரதமர், தவம் போல பயிற்சி மேற்கொள்ள உள்ள விண்வெளி வீரர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
நிலவில் சந்திராயன் தரையிறங்கிய சிவசக்தி பாயிண்ட் இந்தியாவின் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், சந்திரயான், ககன்யான் போன்ற விண்வெளிப்பயணங்களில் பெண்கள் முக்கியப்பங்கு வகிப்பதாக கூறினார்.
2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.