இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் குடியிருப்புகளை இழந்து உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஜோர்டன் போர் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நிவாரணப் பொருட்களை தரை மார்க்கமாக அனுப்ப காலதாமதம் ஆனதால், வான்வழியே அனுப்பிய ஜோர்டன் ராணுவம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாராசூட் மூலம் வீசியது