முக்கிய புள்ளிகள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்றும், அப்படி அவர்கள் இணையும் போது கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லாமல் இணைக்கவேண்டும் என்பதாலேயே காலதாமதம் ஆவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
திருப்பூர் குமரனின் நினைவிடத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கட்சிகள் காலையில் இருந்து இரவு வரை பா.ஜ.கவை பின்தொடர்வதாகவும் கூறினார்.