​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீண்ட நேரமாக திறக்காமல் பழுதாகிய ரயில்வே கேட்... வாகன ஓட்டிகள் மின்சார ரயில்களை மறித்து போராட்டம்

Published : Feb 27, 2024 9:35 AM

நீண்ட நேரமாக திறக்காமல் பழுதாகிய ரயில்வே கேட்... வாகன ஓட்டிகள் மின்சார ரயில்களை மறித்து போராட்டம்

Feb 27, 2024 9:35 AM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில்வே கேட் பழுதாகி திறக்க முடியாமல் லாக் ஆகி விட்டதால் நீண்ட நேரமாக கேட் திறக்கப்படவில்லை.

இதனால் பொறுமை இழந்த 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள்  தண்டவாளத்தின் குறுக்கே நின்று  அந்த வழியே செங்கல்பட்டு  மற்றும் கடற்கரை சென்ற புறநகர் மின்சார ரயில்களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேட் திறக்கப்படாததால் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.