சிவகங்கை மாவட்டம் கல்லுவழி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாகத் தாக்கிவிட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் கைதான தினேஷ்குமார், போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, காலில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளான்.
இரு தினங்களுக்கு முன்கைதான தினேஷ்குமாரை, ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தினேஷுக்கும் அவனால் தாக்குதலுக்குள்ளான சார்பு ஆய்வாளர் சித்திரவேல் என்பவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.