​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டா வரச்சொல்லுங்க.. கையோடு கூட்டிவாருங்க.. DRUG மாஃபியா ஜாபர் எங்கே ? என்ன நடக்கிறது ?அதிர்ச்சியில் அமீர்

Published : Feb 27, 2024 6:13 AM



கண்டா வரச்சொல்லுங்க.. கையோடு கூட்டிவாருங்க.. DRUG மாஃபியா ஜாபர் எங்கே ? என்ன நடக்கிறது ?அதிர்ச்சியில் அமீர்

Feb 27, 2024 6:13 AM

மத்திய போதை தடுப்பு போலீசாரின் சம்மனுக்கு ஆஜராகாமல் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ள நிலையில் , தனக்கு கிடைத்திருக்கின்ற செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக அமீர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

பருத்தி வீரன் இயக்குனர் அமீருக்கு பின்னால் நிற்கும் இவர் தான் , மத்திய போதை தடுப்பு பிரிவு காவல்துறையினரால் தேடப்படும் ஜாபர் சாதிக்..!

டெல்லியில் இருந்து 50 கிலோ சூடோபெட்ரின் என்ற மெத்தபெட்டமைன் மூலப்பொருட்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு கடத்த முயன்றதாக சென்னையை சேர்ந்த முகேஷ் , முஜிபுர்ரஹ்மான் விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை மத்திய போதை தடுப்பு கைது செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தேங்காய் பவுடர், ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை வஸ்துக்கள் கடத்தப்பட்டிருப்பதும் இந்த கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும், திமுகவின் அயலக அணி நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும் தெரியவந்தது. ஜாபர் வசித்து வரும், மயிலாப்பூர் சாந்தோம், அருளானந்தம் தெருவில் உள்ள அவரது 3 அடுக்கு மாடி வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டிக் கிடந்ததாகவும், வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக், தனது சகோதரர்கள் சலீம், மைதீன் மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிச்சென்றிருப்பது தெரியவந்ததால் சம்மன் நோட்டீஸை வீட்டு கதவில் ஒட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 3 தினங்களாக ஜாபரின் வீடு பூட்டியே கிடக்கும் நிலையில் விசாரணைக்கு ஆஜராகததால் ஜாபரை தனிப்படை அமைத்து மத்திய போதை தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர். ஜாபருடன் சேர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 4am காபி ஷாப், ராதாகிருஷ்ணன் சாலையில் லா கபே உள்ளிட்ட உணவகங்களை நடத்திவரும் பருத்தி வீரன் இயக்குனர் அமீர் மிரண்டு போயுள்ளார்.

ஜாபருடனான தொடர்பு குறித்து விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் அமீர் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 22 ந்தேதி இறைவன் மிகப்பெரியவன் படப்பிடிப்பில் இருந்த போது படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது என்றும் ஏன் நிறுத்தப்பட்டது ? என்ன சுற்றி என்ன நடக்கின்றது ? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ள அமீர் , செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயேனால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்க பட வேண்டியதுமே என்று கூறி உள்ளார்

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணாம் சம்ப்பாதிக்கலாம் என்று கொள்கைக்கு நான் எப்போதும் எதிராணவன் என்றும் அந்தவகையில் சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப்போவதில்லை என்றும் முழுவிவரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் செய்தியாளர்களை நேரடியாக சந்திப்பதாகவும் கூறி உள்ளார்.