திண்டுக்கல்லில் தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலரின் தந்தையை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
25-வது வார்டு கவுன்சிலரான சிவாவின் தந்தை நாகராஜ், மக்கான் பள்ளிவாசல் அருகே சென்றுக் கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடியை தூவியதாக கூறப்படுகிறது.
நிலை தடுமாறி கீழே விழுந்தவர் எழுந்து அங்குமிங்குமாக ஓடவே அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு அக்கும்பல் தப்பியோடியதாக கூறப்படுகிறது.