நாட்டை வேகமான வளர்ச்சிப்பாதைக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் பா.ஜ.கவை ஆதரிப்பதாகவும், பா.ஜ.க வேறு எந்த கட்சியையும் உடைக்கவில்லை என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் ஏற்பாடுகளை பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் சென்று ஆய்வு செய்த எல்.முருகன், ஊழலுக்கு எதிரான பா.ஜ.கவின் செயல்பாடு ஊழல் நிறைந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.