தலைமறைவாக இருந்த தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
2001ஆம் ஆண்டு ஹனிப் ஷேக் என்பவனுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், சிறப்பு குழுவை அமைத்து அவனை தேடிவந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரிலிருந்த ஹனிப் ஷேக்கை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஹனிப் ஷேக் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, உருது பள்ளியில் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தது தெரிவந்துள்ளது.