பா.ஜ.கவின் வெற்றி உலக அளவில் இந்தியாவை பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக மாற்றும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
பா.ஜ.கவோடு கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த ஜி.கே.வாசன், நாட்டின் மீது அக்கறை கொண்டு பொருளாதாரத்தை கணக்கில் வைத்து தாங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
தி.மு.க மக்கள் விரோத அரசாக செயல்பட தொடங்கி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் விமர்சித்தார்.