மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் பெண்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாருக்கும் அந்த கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சந்தேஷ்காளிக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. மகளிர் அணியினரை அங்கு குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவப் படை வீரர்கள் தடுத்ததால் பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்ட பெண்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர்.
அப்போது, திரிணமூல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய அவர்கள் வலியுறுத்தினர்.