சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க தயங்காது என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காணொலி வாயிலான கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களவை தேர்தலுக்கு பின், தி.மு.கவிலும், அரசிலும் மாற்றங்கள் இருக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.