தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்தில் செயல்படும் 38 ஆயிரத்து 292 இ-சேவை மையங்களில், கடந்த ஆண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் தொடங்கப்பட்டதாக கூறினார்.
இயற்கை பேரிடர் காலங்களில், இணையம் மற்றும் தகவல்தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும்! மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றவேண்டும்! அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.
வளர்ச்சி என்பதை வெறும் எண்கள் மட்டும் அல்ல, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் காட்டுகிறோம்.