ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் இரண்டு கொலைக் குற்றவாளிகளுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
தாலிபன் உச்சநீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அந்த இருவரையும் கொலை செய்யப்பட்ட இருவரின் உறவினர்களே துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
மதத்தலைவர்கள் இருவருக்கும் மன்னிப்பு வழங்கும்படி விடுத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.