பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, செங்கடல் வழியாக சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்திவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இனி நீருக்கடியில் செல்லக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.
இதுதவிர இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உடன் தொடர்புடைய சரக்கு கப்பல்களை செங்கடல் வழியாக இயக்கக்கூடாது என கப்பல் நிறுவனங்களுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
உலகின் 12 சதவீத கப்பல் போக்குவரத்து அவ்வழியாக நடைபெற்றுவரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலால் பல கப்பல்கள் ஆப்ரிக்க கண்டத்தை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.