இந்திய விமானப்படைக்கு உயர்திறன் கொண்ட ரேடார்கள் வாங்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை முழுமையாகக் கண்காணிக்க இந்த ரேடார்களைப் பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது.
13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் இந்த ரேடார்களை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
இதில் பழைய ரேடார்களுக்கு பதிலாக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரேடார்களைப் பொருத்தவும், ட்ரோன்கள் மற்றும் விமானங்களின் தாக்குதலில் இருந்து முக்கியப் பகுதிகளைப் பாதுகாக்க 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நவீன ரேடார்களை வாங்கவும் இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.