​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பு

Published : Feb 22, 2024 12:09 PM

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பு

Feb 22, 2024 12:09 PM

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னைக்கு அருகே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தே இஸ்ரோவின் பெரும்பாலான விண்வெளி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடம், காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டியதுடன் நிலையான காலநிலையும்  நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.

அதற்கேற்ப நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்துள்ள குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.