உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.மக்களவையில் மொத்தமுள்ள 80 இடங்களில் சமாஜ்வாதிக் கட்சிக்கு 63 இடங்களும் காங்கிரசுக்கு 17 இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
இண்டியா கூட்டணியை இது வலுப்படுத்தும் என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் தொலைபேசி மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.