மத்திய அரசுக்கு எந்த இடையூறையும் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், தங்களது கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியை நோக்கி பேரணி மேற்கொள்வதற்காக ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் குவிந்துள்ள விவசாயிகளை, போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஜகஜித் சிங் தலேவால், சர்வான் சிங் பந்தெர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
அரசு இறங்கி வந்தால் நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர்கள், விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் என்பது மத்திய அரசுக்குப் பெரிய தொகை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.