தென்கொரிய அரசை கண்டித்து ஆறாயிரத்து 400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென் கொரியாவில் பத்தாயிரம் பேருக்கு 25 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
மருத்துவ கல்லூரிகளில் ஆண்டொன்றுக்கு மாணவர் சேர்க்கையை 3 ஆயிரத்திலிருந்து 5,000 ஆக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வருங்காலத்தில் ஊதியம் குறைக்கப்படலாம் எனக்கருதி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.