காஸா போரில் இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த அமெரிக்கா, முதன்முறையாக தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கான வரைவு திட்டத்தை ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளது.
பதிலுக்கு அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பிராந்திய எல்லைகளை குறைத்து, அங்கு இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும்படி அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் பேசிவருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தியதன் மூலம் இஸ்ரேலுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. இயக்குனர் ரிச்சர்ட் கோவன் தெரிவித்துள்ளார்.