ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்குப் பகுதியில் உள்ள நூர்காரத் பகுதியில் உள்ள மொகானி என்ற கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப் பொழிவு காரணமாக நிலச்சரிவு உண்டானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் நூரிஸ்தான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.