சண்டிகரில் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, பஞ்சாப் முதலமைச்சர் உள்ளிட்டோர் 4வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பருத்தி மக்காசோளம் போன்ற பயிர்களுக்கு மாற்றுப் பயிராக பருப்பு போன்றவற்றை விளைவிக்க விவசாயிகள் முன்வந்தால் 5 ஆண்டுகளுக்கு அடிப்படை ஆதார விலை குறித்த ஒப்பந்தம் போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் புதிய அரசு பரிசீலித்து சுமுகத்தீர்வு காணும் என்று உறுதியளித்தார்.
விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.