இமாச்சலப் பிரதேசம் குலுவில் அடல் சுரங்கம் அருகே புதிதாகப் பனிப் பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சுரங்கத்தைச் சுற்றிலும் வெண் பனி மூடிக் கிடக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மலை சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.