உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இன்று நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இத்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலம் 33 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு சம்பல் மாவட்டத்தில் கல்கி தாம் கோவிலையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.