எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான குப்பைக் கிடங்காக மாறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளும் அதிகமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BASE CAMP எனப்படும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் 900 முதல் ஆயிரம் டன் குப்பைகள் இங்கு புதைக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பருவத்திலும் இங்கு 75 டன் குப்பைகள் வெளியேற்றப்படும் நிலையில் 50 டன் குப்பைகள் மலையின் உச்சிப் பகுதியில் 50 டன் அளவிற்கு குப்பைகள் சேர்ந்து விடுவதாக கூறும் விஞ்ஞானிகள், எவரெஸ்ட் சிகரம் தாங்க முடியாத அளவு கழிவுகளால் அச்சுறுத்தப்படுவதாக எச்சரித்துள்ளனர்.