5 நாடுகள் எப்படி 188 நாடுகளின் குரலை புறந்தள்ள முடியும்?.. ஐ.நா. சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் இந்திய பிரதிநிதி கேள்வி
Published : Feb 18, 2024 3:42 PM
5 நாடுகள் எப்படி 188 நாடுகளின் குரலை புறந்தள்ள முடியும்?.. ஐ.நா. சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் இந்திய பிரதிநிதி கேள்வி
Feb 18, 2024 3:42 PM
ஐ.நா. பாதுகாப்பு சபை சீர்திருத்தம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், இன்னும் எவ்வளவு காலம்தான் 188 உறுப்பு நாடுகளின் குரலை ஐந்தே நாடுகள் புறந்தள்ளும் நிலை தொடரும் என்று கேள்வி எழுப்பினார்.
நாடுகளின் அளவு மற்றும் வலிமையை கருதாமல் அனைத்து நாடுகளுக்கும் வாய்ப்பு தரப்படுவதே ஐ.நா.வின் செயல்பாட்டை சிறப்பானதாக்கும் என்ற ருச்சிரா, ஐ.நா. சீர்திருத்தம் என்று பேசும்போது ஒரு சில நாடுகள் மட்டும் அனைத்து நாடுகளின் குரலாக எப்படி இருக்க முடியும் என்ற அடிப்படை கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.