ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நாவல்னி சிறையில் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதினின் ஊழல்களுக்கும், அராஜகச் செயல்களுக்கும் எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர் நாவல்னி என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அவருடைய மரணம் வியப்பளிக்கவில்லை என்ற போதும் கோபத்தைத் தூண்டியிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
47 வயதான நாவல்னி 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். காலை நடைப்பயிற்சி செய்து திரும்பிய போது அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்