தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது எனக்கூறி அத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, மாற்றுத் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 16 ஆயிரத்து 437 கோடி ரூபாய் மதிப்புடைய 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பாஜகவிற்கு 10,000 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அறிவுறுத்தியபடி நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடுவது வங்கிச்சட்டத்திற்கு எதிரானதாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.